Close

>> New (02.04.2020) >> Press release of National Institute of Siddha regarding COVID 19 disease

As the spread of COVID-19 is rampant and become pandemic, the general public is instructed to remain locked up indoors, to prevent the community spread of the infection. In this connection, the authorised bodies of Siddha System and experienced Siddha Physicians have recommended a Siddha therapeutic regimen to the Governments at the State and Centre. This includes Siddha medical formulations like Kaba Sura Kudineer, Nilavembu Kudineer and Adathodai Manappagu which are indicated for both asymptomatic and symptomatic COVID-19 positive patients who are quarantined or in isolation wards as per the directives of the health authorities in Government under the supervision of Siddha Physicians.

Meanwhile, misreading the situation, the general public keep thronging the Siddha hospitals and pharmacies for Kaba Sura Kundineer in the hope of stocking up the medicines even though it is not needed for them. At a crucial juncture when people have to stay back at home to prevent the Community Spreading, they choose to gather in large numbers for the purpose of getting Kaba Sura Kudineer. This happens every day at this Institute also which is totally uncalled for. Keeping this in view, NIS has suspended the outpatient services to patients below 15 years and above 60 years of age and also for the less severe complaints.

The services are continued presently only for patients with severe symptoms of chronic diseases, palliative care to cancer patients and other non-communicable diseases.

Those who are tested positive for Corona need to approach the approved Govt. Hospitals where the exclusive treatment is instituted. The general public is strongly advised not to roam about for flimsy reasons and to cooperate with guidelines and instructions issued by the Government from time to time.

தற்சமயம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நோய் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனித்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சித்த மருத்துவத்தில் கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு நோய்க் குறிகுணங்களுடன் காணப்படுகிறவர்களுக்கு, சித்த மருத்துவ முறையாக, அனுபவமிக்க சித்த மருத்துவக் குழுவினர், கபசுரக் குடிநீர் மற்றும் சில சித்த மருந்துகளை  அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். மேலும் இந்த மருந்துகளை, கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அரசு மற்றும் சுகாதார துறை கண்காணிப்பில், சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவர்களின் மேற்பார்வையில் கொடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொது மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ளாமல், கபசுரக் குடிநீர் பொடியினை வாங்குவதற்காக  அனைத்து சித்த மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவர்களை அணுகுகிறார்கள். அனைவரும் தனித்திருக்க வேண்டிய இந்த முக்கியமான கால கட்டத்தில், அவ்வாறு இல்லாமல் கூட்டம் கூட்டமாக சித்த மருத்துவமனைகளை நோக்கி செல்கிறார்கள். அது போலவே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையிலும்  கபசுரக் குடிநீர் வாங்க  மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.  இந்த நிலையினை கருத்தில் கொண்டே 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் சாதாரண நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கான மருத்துவ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இம்மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிர நோய், புற்று நோய் போன்ற நாட்பட்ட நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் அவர்களின் நோய்க்கு உரிய மருந்துகளை சித்த மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் வழங்கப்படுகிறது. 

கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் முறையான அரசு பரிந்துரை செய்தபடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றுவதை தவிர்த்து பொது மக்கள் நோய் பரவுதலை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(Prof. Dr. R. Meenakumari)

                                                                                                                                    Director, NIS

 

COVID-19 : Archive